Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கொடைக்கானலில் முன்னதாகவே தொடங்கிய உறை பனி

கொடைக்கானலில் முன்னதாகவே தொடங்கிய உறை பனி
பனி படர்ந்து காட்சியளிக்கும் கொடைக்கானல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்தது

பகிரவும் WhatsApp Facebook

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்கள் பனிக் காலங்களாகும். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தொடர் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக மலைப் பகுதியில் அதிக வெப்பம் நிலவியது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான நட்சத்திர ஏரி, கீழ்பூமி, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் சில இடங்களில் நீர் பனியும், சில இடங்களில் உறை பனியும் காணப்பட்டது.

குறிப்பாக, நட்சத்திர ஏரி, ஜிம்கானா புல்வெளி பகுதி, பியர் சோலா சாலை, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் செடிகள், புல்வெளிகளில் பனி படர்ந்தும், பனிக் கட்டிகள் நிரம்பியும் காணப்பட்டது. இப்பகுதியில் 10 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வெப்பநிலை நிலவியதால் கடும் குளிரும் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு முன்கூட்டியே உறை பனி தொடங்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை குறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் முழுவதும் மழை இல்லாத நிலையில் நேற்று அதிகாலையில் பனிப்பொழவு காணப்பட்டது. 

காலை நேரத்தில் தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் பனிமூட்டம் மற்றும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் வெள்ளைப் போர்வை போர்த்தியதுபோல பனிப்பொழிவு இருந்தது.

முந்தைய செய்தி
Nine urban mini forests created in city
அடுத்த செய்தி
ஈதர் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் 26.62 சதவீதம் உயர்வு

தொடர்புடைய செய்திகள்